பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு அனுமதி!

Parliment in one site 800x534 1

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீள்கட்டமைப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்குகு சட்டமா அதிபரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும்  அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version