இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ் மொழி மூலமான விவாத போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய வலி. தென்மேற்கு பிரதேச சபை அணிக்கு இன்று கொழும்பில் பாராட்டு விழா நடாத்தப்பட்டது.
கடந்த 19-11-2021 அன்று நடைபெற்ற விவாத போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை வலிகாமம் தென்மேற்கு – மானிப்பாய் பிரதேச சபை பெற்றுக்கொண்டது.
இரண்டாமிடத்தினை மட்டக்களப்பு மண்முனைமேற்கு வவுனதீவு பிரதேசசபையும் மூன்றாமிடத்தினை புதுக்குடியிருப்பு பிரதேசபையும் பெற்றுக்கொண்டது.
முதலாமிடத்தை பெற்றுக்கொண்ட மானிப்பாய் பிரதேசசபையின் விவாதகுழுவில் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் உறுப்பினர்களான அருட்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ, கந்தையா ஜெசிதன் , லோகப்பிரகாசம் ரமணன் , சிவசண்முகநாதன் அனுசன் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
அணியின் தலைவராக உறுப்பினர் கந்தையா ஜெசிதன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment