31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

Share

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகின்றார் என்று  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பதில் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்(M.A.Sumanthiran) குற்றஞ்சாட்டினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் 60 வருட நிறைவையொட்டி நேற்று புதன்கிழமை கொழும்பு – விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார்.

இந்த உரை குறித்து தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பதில் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“தங்களிடம் முன்றிலிரண்டு பெரும்பான்மை இருப்பதாகவும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகின்றார்

அதிகாரம் கெடுவிக்கும்; முழுமையான அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும். யாழ்ப்பாண மாநகர சபையில் 10/41 பெரும்பான்மை என்று சொல்லும்போது அவரது கணிதத் தகைமை வெளிப்படுகின்றது” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...

29 6
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்! தாயிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள்

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளது....