இலங்கைசெய்திகள்

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அனுர குமார

22 2
Share

தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அனுர குமார

தனது வெளிநாட்டுப் பயணங்களுக்காக 70 மில்லியன் ரூபாய் செலவழித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) மறுத்துள்ளார்.

அனைத்து வெளிநாட்டுப் பயணங்களுக்கும் 3.37 மில்லியன் ரூபாய் மட்டுமே தான் செலவழித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது இந்தியா மற்றும் சீன பயணங்களுக்கு அந்த நாடுகளே ஆதரவளித்ததாகக் கூறிய அவர், தென் கொரியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, சுவீடன், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளுக்கான பயணங்களுக்கு மட்டுமே தான் செலவழித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், இதற்காக செலவழிக்கப்பட்ட அனைத்து பணமும் அந்த நாடுகளில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் கிளைகளைச் சேர்ந்தவர்களால் செலவழிக்கப்பட்டதாகவும் அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...