ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கிரேக்கத்தில் பாரியளவில் நிதி முதலீடு செய்துள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்ஒலும்ப என்பவரினால் ஜனாதிபதிக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதி அநுர பாரியளவிலான நிதியை கிரேக்கத்தில் முதலீடு செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் துசித ஹல்ஒலும்பவிற்கு எதிராக குற்ற புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த சில சட்டத்தரணிகளினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.