அன்டிஜென் பரிசோதனை வீடுகளில்!!

fr

துரித அன்டிஜென் பரிசோதனைகளை வீடுகளில் மேற்கொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின்போது, நேற்று அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட் தொற்றால் உயிரிழப்போரில் 86 வீதமானோர் பல்வேறு நோய்களுக்குள்ளானவர்கள் எனவும், 12 வீதமானோர் ஒரு தடுப்பூசியை மாத்திரம் ஏற்றிக்கொண்டவர்கள் எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களில் 2.5 வீதமானவர்களே கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்த சுகாதார அமைச்சர், அவர்களும் ஏனைய நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் எனக் கூறியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாத நிறைவுக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசியை ஏற்ற முடியும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் இரண்டு கொரோனாத் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டதன் பின்னர், மூன்றாவது தடுப்பூசி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

 

Exit mobile version