15
இலங்கைசெய்திகள்

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் ஐ.நா கவலை

Share

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் ஐ.நா கவலை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் நடப்பு அமர்வில், இலங்கை தொடர்பான முக்கிய குழு தமது அவதானங்களை வெளியிட்டுள்ளது. கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மெசிடோனியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான முக்கிய குழுவின் அறிக்கையை ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமைகள் தூதுவர் ரீட்டா பிரெஞ்ச் வெளியிட்டார்.

அதில், காணிகளை மீளளித்தல், நீண்டகால தடுப்புக்காவல் மற்றும் ஊழல் தொடர்பான விடயங்களை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் ஆரம்ப நடவடிக்கைகளை தாம் வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கையர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு செயல்முறையைத் தொடங்குவதற்கு இந்த நடவடிக்கைகள் ஒரு அடிப்படையை வழங்க முடியும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து தாம் கவலையடைவதாக முக்கிய நாடுகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டத்தை மாற்றுவதற்கான தொடர்ச்சியான முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில், சர்வதேச கடமைகளுடன் ஒத்துப்போவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுபடும் சுதந்திரத்தைப் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துவதாக முக்கிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.

நல்லிணக்கத்திற்கான அதன் உறுதிப்பாட்டை இலங்கை முன்னெடுத்துச் செல்லும் போது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், மற்றும் கடந்த கால மற்றும் முரண்பாடுகள் மற்றும் தண்டனையின்மைக்கான மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் பரிந்துரைகளை அர்த்தமுள்ளதாக கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை முக்கிய குழு வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் தேர்தல் முறைமைகளில் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பேணுவதன் மூலமும் மற்றும் ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதன் மூலமும் இலங்கை தனது பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் உயர்ஸ்தானிகர் மற்றும் அவரது அலுவலகத்துடன் இணைந்து பணியாற்றுமாறும், மனித உரிமைகள் பேரவையின் 51-1 தீர்மானத்துக்கு ஆதரவளிக்க தயாராக இருக்குமாறும் இலங்கைக்கு அழைப்பு கோர் குழு என்ற ஜெனீவாவின் முக்கிய நாடுகள் குழு அழைப்பு விடுத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1727583710 Sanath Jayasuriya L
செய்திகள்விளையாட்டு

சனத் ஜயசூரியவின் அதிரடி முடிவு: 20-20 உலகக்கிண்ணத் தொடருடன் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகல்!

எதிர்வரும் 20-20 உலகக்கிண்ணத் தொடரின் பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து தான்...

1767513081 CREW 6
செய்திகள்இலங்கை

4.5 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்: ஃபிட்ஸ் ஏர் பெண் ஊழியர் கட்டுநாயக்கவில் கைது!

சுமார் 4 கோடி 59 இலட்சத்து 26 ஆயிரத்து 957 ரூபாய் பெறுமதியுடைய தங்க நகைகள்...

26 6958360d0ef84
செய்திகள்இலங்கை

தரம் 6 பாடப்புத்தக சர்ச்சை: தவறு செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்கிறது!

புதிதாக அச்சிடப்பட்ட தரம் 6 ஆங்கில மொழிப் பாடத் தொகுதியில் (Module) தகாத இணையத்தள முகவரி...

AA1TmKIK
செய்திகள்இலங்கை

இலங்கைக் கடற்கரைகளில் கரையொதுங்கும் இந்திய ஏவுகணைப் பாகங்கள்: மட்டக்களப்பில் மற்றுமொரு பாகம் மீட்பு!

இந்தியாவினால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றின் சிதைந்த பாகங்கள் மட்டக்களப்பு, ஒந்தாச்சிமடம் கடற்கரைப் பகுதியில் இன்று (04)...