தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி
இலங்கைசெய்திகள்

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி

Share

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி உறுதிமொழி

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படுமென அவர் இங்கு உறுதியளித்துள்ளார்.

அத்தோடு ஊழல் ஒழிப்புச் சட்டம், எதிர்வரும் ஜுலை 19ஆம் திகதி நாடாளுமன்றக் குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும் உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...