இலங்கையை வந்தடைந்த மற்றுமொரு அதிசொகுசு கப்பல்..!
கொரோனா தொற்று பேரிடரின் பின்னராக கடந்த சில மாதங்களாக பல நாடுகளிலிருந்தும் சுற்றுலா கப்பல்கள் இலங்கை நோக்கி வருகை தந்த வண்ணமுள்ளன.
இந்நிலையில் 420 சுற்றுலா பயணிகளுடன் மற்றுமொரு கப்பல் இலங்கையை இன்று(12) வந்தடைந்துள்ளது.
MS Europa-2 எனும் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்ததுள்ளது.
இந்தக் கப்பலில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
குறிப்பாக கதிர்காமம், சங்கிரிலா கோல்ப் கிளப், யால, உடவல்லவ் பூங்கா மற்றும் ஹம்பாந்தோட்டை சுற்றுலா தளங்களுக்கு செல்லவுள்ளனர்.
அடுத்து வரும் இரு நாட்களில் சைபிரஸ் நாட்டினை நோக்கி MS Europa-2 பயணத்தை தொடரவுள்ளது.
#srilankaNews
Leave a comment