இலங்கை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு

1 5

இலங்கை நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முக்கிய தீர்ப்பு

இலங்கை நீதிமன்றால் வழங்கப்பட்ட மற்றுமொரு முக்கிய தீர்ப்பில், இலங்கையில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்காக அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட திருமண இரத்து ஆணையின் செல்லுபடியை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.

இதன்படி, அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையைப் பெற்ற தம்பதியரின் திருமணத்தை முறித்துக் கொள்வதற்கான உத்தரவை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி சந்திம எதிரிமான்ன (Chandima Edirimanna ) பிறப்பித்துள்ளார்.

மற்றொரு நாட்டில் உள்ள தகுதி வாய்ந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விவாகரத்து ஆணையை அங்கீகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதல்களை கருத்திற் கொண்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று மாவட்ட மேலதிக நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்

முன்னதாக, இலங்கையின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அதன் அண்மைய தீர்ப்பு ஒன்றில், இலங்கையில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் வேறொரு நாட்டில் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட திருமணத்தை கலைத்ததை நிரூபிக்கும் ஆவணத்தை ஏற்றுக்கொள்வதற்கு தடையில்லை என்று கூறியிருந்தது

எவ்வாறாயினும், இந்த ஏற்பு நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் சான்றுகள் தொடர்பான சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது.

Exit mobile version