மற்றுமொரு தூதுவரும் ராஜினாமா!

21 6142d6784f580

மற்றுமொரு தூதுவரும் ராஜினாமா!

மியன்மாருக்கான இலங்கைத் தூதவராக கடமையாற்றிய பேராசிரியர் நளிந்த டி சில்வா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பதவி விலகிய அவர் இன்று அதிகாலையில் நாடு திரும்பியுள்ளார்.  தற்போது அவர் தனிமைப்படுத்தலில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் அண்மைக்காலமாக பதவி விலகி வருகின்ற நிலையில் இவரது பதவி விலகலும் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதவராக 9 மாதங்கள் பணியாற்றிய பிரபல இராஜதந்திரி ரவிநாத் ஆரியசிங்க அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version