நாட்டில் கொவிட் தொற்றினால் மேலும் 71 பேர் பலியாகியுள்ளனர் .
இவர்களில் 30 வயதுக்கு குறைவானவர் , ஒருவரும் 60 வயதுக்கு குறைவானவர்கள் 14 பேரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 56 பேரும் அடங்குகின்றனர் .
இதனையடுத்து இலங்கையில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 680 ஆக உயர்வடைந்துள்ளது .
இதேவேளை, நாட்டில் மேலும் ஆயிரத்து 78 பேருக்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து,இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டகொவிட்தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 13 ஆயிரத்து 609ஆக உயர்வடைந்துள்ளது .
இவர்களில் 4 இலட்சத்து 54 ஆயிரத்து 532 பேர் தொற்றில் இருந்து பூரண குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 46 ஆயிரத்து 397 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Leave a comment