மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம

Sri Lanka police

மேலும் 15000 பேரை பொலிஸில் இணைக்க தீர்மானம்! – திலும் அமுனுகம

அடுத்த ஆண்டு முதல் நாட்டில் 15000 பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைக்க முதற்கட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போதைய சூழலில் நாட்டில் பொலிஸ் சேவையில் 85 ஆயிரம் பொலிஸார் பணிபுரிகின்றனர். எனவும் இன்னமும் 28 ஆயிரம் பேர் பொலிஸ் சேவைக்கு தேவை.

அதன் பிரகாரம் முதற்கட்டமாக 15 ஆயிரம் பேர் இணைத்து பொலிஸ் சேவையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக்குவதற்கான அனுமதியை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அரச முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்துக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இராணுவத்தில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் பேர் கொண்ட இரு குழுக்களை பயிற்சியளித்து சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version