ddd
இலங்கைசெய்திகள்

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல்

Share

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல்

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் யாழ். நகரில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய 05 மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலாவுடன் தொடர்புடைய வியாபாரங்களில் ஈடுபடும் உரிமையாளர்களின் கூட்டமைப்பான வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியத்தின் (NPTA) வருடாந்தப் பொதுக் கூட்டம் கடந்த புதன்கிழமை(11) மாலை 05 மணியளவில் யாழ். நகரில் அமைந்துள்ள ஜெட்விங்(Jetwing) விருந்தினர் விடுதியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இடம்பெற்ற நிர்வாகத் தெரிவில் வலம்புரி மற்றும் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியின் உரிமையாளர் ஜெகசீலன் தலைவராகவும் D Villa உரிமையாளர் A.டிலான் செயலாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றியம் என்பது வடமாகாணத்தில் உள்ள சுற்றுலா விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையோடு தொடர்புபட்ட ஏனைய அமைப்புகளையும் இணைத்து செயற்படுகின்ற ஒரு பொது அமைப்பாகும்.

வடமாகாண சுற்றுலாத் துறையினை வளமான சுற்றுலாத்துறையாக மேம்படுத்துவதுடன் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதும் இவர்களது பிரதான பணியாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...