19 20
இலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Share

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் நாளை (21) நடைபெறவுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri lanka) கோரிக்கைக்கு அமைய, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.

இவ்வாறு இன்றைய தினம் மூடப்படும் சகல பாடசாலைகளும், எதிர்வரும் 23ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்குத் தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாக்கு எண்ணும் நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கான சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, மீண்டும் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...