7 4
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்திற்கு தொடருந்தில் பயணிக்கவுள்ளவர்களுக்கு வெளியான அறிவிப்பு

Share

வவுனியா மற்றும் ஓமந்தை இடையே தொடருந்துபாதையில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் காங்கேசன்துறை (KKS) இடையே இயக்கப்படும் யாழ்தேவி தொடருந்து சேவை தாமதமாகும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி ஒக்டோபர் 7 முதல், கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு காலை 11.35 மணிக்கு வவுனியாவை வந்தடையும்.

பின்னர் தொடருந்து வவுனியாதொடருந்து நிலையத்தில் இரண்டு மணி நேரம் நாற்பது நிமிடங்கள் நின்று பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும். இந்த அட்டவணை 11 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

இதற்கிடையில்,யாழ்தேவி தொடருந்து எண் 4078 அதே கால கட்டத்தில் 30 நிமிடங்கள் தாமதமாக, வழக்கமான நேரத்திற்குப் பதிலாக காலை 11.00 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும்.

இந்தக்கால கட்டத்தில் முன்பதிவுகளை இரத்து செய்ய விரும்பும் பயணிகளுக்கு பணத்தைத் திரும்பப் பெற உரிமை உண்டு என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
13 4
இலங்கைசெய்திகள்

ஜே.வி.பியுடன் மறைகர அரசியல்! குற்றச்சாட்டுக்களை புறக்கணித்த ரங்க திசாநாயக்க

ஜே.வி.பியின் முன்னாள் உறுப்பினர் தந்தன குணதிலக்க தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாகவும்,அவை உண்மைக்கு புறம்பானவை என...

12 4
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள்.. அர்ச்சுனாவின் பகிரங்க குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். தென்னிலங்கை தொலைக்காட்சி...

11 4
இலங்கைசெய்திகள்

வலுக்கும் தாஜுதீன் விவகாரம்.. நாமலின் சந்தேகத்திற்கிடமான ஆர்வம்!

வசீம் தாஜுதீனின் மரணம் குறித்த புதிய விசாரணைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற...

10 4
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள உயிராபத்து – அச்சத்தில் ராஜபக்ச குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால்...