24 660a6bd926a21
இலங்கைசெய்திகள்

ஐ.எம்.எப்இன் வேலைத்திட்டம் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது

Share

ஐ.எம்.எப்இன் வேலைத்திட்டம் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் நடைபெறுவதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே இந்த அறிவிப்பு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் அது செப்டெம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் ஆரம்பத்தில் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக ஆயிரம் கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து உதவி தேர்தல் ஆணையாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துமாறும், அவ்வாறு நடத்தினால் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிக்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 6933e6366e508
உலகம்செய்திகள்

கனடாவில் கார் விபத்து: யாழ்ப்பாண இளைஞர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோரமான கார் விபத்து ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதான இளைஞர் ஒருவர்...

25 69342677b4982
இலங்கைசெய்திகள்

அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் விற்பனை: கடை உரிமையாளருக்கு ரூ. 10 இலட்சம் அபராதம்!

பலாங்கொடை – பெலிஹுல்ஓயா பகுதியில், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குத் தண்ணீர் போத்தலை விற்பனை...

images 3 1
இலங்கைசெய்திகள்

புயல் நிவாரணம்: பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடன் தவணை 6 மாதங்கள் இடைநிறுத்தம் – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு!

சமீபத்திய புயல் மற்றும் வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு நிவாரணம் வழங்குமாறு இலங்கை...

images 4 1
இலங்கைசெய்திகள்

டித்வா புயல் பேரழிவு: சி.டி ஸ்கேன் உட்பட 3 பெரிய மருத்துவமனைகள் சேதம் – 100 சிறிய மருத்துவமனைகள் பாதிப்பு!

‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்களால் நாட்டின் மூன்று பெரிய மருத்துவமனைகளும், சுமார் 100...