25
இலங்கைசெய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அரச தரப்பு விளக்கம்

Share

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் அரச தரப்பு விளக்கம்

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த (Anil Jayantha) தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (1.03.2025) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று (28.02.2025) இரவு முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

இந்நிலையில் எதிர்க்கட்சியினர் நாட்டில் மீண்டும் எரிபொருள் வரிசை யுகம் மலர்வதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இதற்குப் பதிலளிக்கும் போதே பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவும் நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவவில்லை எனவும், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளது போன்றதொரு பின்னணியை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருப்பதாகக் காட்ட சில ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்கள் ஒரு செயற்கை எரிபொருள் நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
04 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடியை சமாளிக்க விசேட பொறிமுறை: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு உரை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிபொருள் விநியோகத் தடைகளை எதிர்கொள்ள இலங்கை...

03 18
செய்திகள்உலகம்

‘சேவ் அமெரிக்கா’ சட்டமூலம்: ஆதரவளிக்காத செனட்டர்களுக்கு டொனால்டு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீர்மானமிக்க சட்டமூலமாக அமையவுள்ள ‘சேவ் அமெரிக்கா’ (Save America Act) சட்டமூலத்திற்கு...

02 17
செய்திகள்உலகம்

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் இராஜினாமா: ஈரான் போர் குறித்து ட்ரம்பிற்குப் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள ஜோசப் கென்ட்,...

01 17
செய்திகள்விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் முன்னாள் வீரர்களைக் கௌரவிக்கின்றது: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியுடன் ஒன்றுகூடல்

இந்தியப் பிரீமியர் லீக் (IPL) 2026 தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)...