24 663af1f53ce5d
இலங்கைசெய்திகள்

டயானாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

Share

டயானாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி! உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு (Diana Gamage) நாடாளுமன்றத்தில் அமர்வதற்கான சட்டப்பூர்வ தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இன்று (08) அறிவித்துள்ளது.

டயானா கமகே பிரித்தானிய பிரஜையாக இருப்பதால் இந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அமர்வதற்கு சட்டரீதியாக தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் (Diana Gamage) நாடாளுமன்ற ஆசனம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பானது வழங்கப்படவுள்ளது.

குறித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (08.05.2024) அறிவிக்கவுள்ளது.

முன்னதாக இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்ற ஆசனத்தின் சட்டபூர்வமான தன்மையை சவாலுக்கு உட்படுத்தும் நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்திருந்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சமூக ஆர்வலர் ஓசல ஹேரத் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பிலேயே இன்று உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

பிரித்தானிய நாட்டவராக இருந்து கொண்டு இலங்கையின் கடவுச்சீட்டை பெற்றிருந்தார் என்ற குற்றச்சாட்டே டயானா கமகேக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், இது நிரூபிக்கப்பட்டால் அவர் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...