உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அறிவிப்பு!

Provincial Council election

பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது சாத்தியம் என சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவது சாத்தியம் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் மேலும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி எல்லை நிர்ணய குழு காரணமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் தீர்மானித்துள்ளது.

அதன்படி, இது தொடர்பான சட்டமா அதிபரின் பரிந்துரை தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.

தற்போதைய நிலவரத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமாயின் அதனை ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version