அத்தியாவசிய பொருள்களுள் ஒன்றாக விலங்கு உணவை அறிவிக்க விவசாயத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
மிருக வள, விவசாய நில மேம்பாட்டு பால் மற்றும் முட்டை உள்ளிட்ட கைத்தொழில் இராங்க அமைச்சர் டி.பி.ஹேரத் விடுத்த கோரிக்கைக்கு அமையவே விவசாயத்துறை அமைச்சர் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
விலங்கு உணவுகளின் விலைகள் அதிகரிக்கின்றமையால் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன் கால்நடை வளர்ப்போர் பல அசெளகரியங்களையும் நோக்குகின்றனர். இவற்றுக்கு தீர்வுகாணும் முகமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.