45 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அங்கஜன் வழங்கிய நீராகாரத்தை தூக்கி வீசிய போராட்டக்காரர்!

Share

அங்கஜன் வழங்கிய நீராகாரத்தை தூக்கி வீசிய போராட்டக்காரர்!

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போராட்டக்களத்தில் நிற்பவர்களுக்கு என வழங்கிய நீராகாரத்தை தூக்கி வீசி அநாகரிகமாக நடந்து கொண்டமை அங்கிருந்தவர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.
தையிட்டி விகாரையை அகற்ற கோரி நேற்றைய தினம் புதன்கிழமை முதல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ,விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு நேரில் வந்து , தனது ஆதரவை தெரிவிதத்துடன் , அங்கிருந்தவர்களுக்கு சோடா , பால் பாக்கெட் போன்ற நீராகாரங்களையும் பிஸ்கெட் வகைகளையும் வழங்கினார்.
போராட்ட  களத்தில் இருந்து அங்கஜன் வெளியேறியதும் , அவர்கள் கொடுத்தவை அருகில் உள்ள வேலி ஓரம் வீசப்பட்டு இருந்தது.
அதனை அவதானித்த அங்கிருந்தவர்கள் , நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் காணப்படும் நிலையில் , எவ்வளவோ பேர் உணவுக்காக ஏங்கி நிற்கும் நிலமை காணப்படுகின்ற இந்த கால பகுதியில் உணவு பொருட்களை வீசி எறிந்து அநாகரிகமாக செயற்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க எந்த அருகதையும் அற்றவர்கள் என பலரும் கவலை தேய்ந்த குரலுடன் விசனம் தெரிவித்தனர்.
அதேவேளை போராட்ட களத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற மக்கள் பிரதிநிதிகளை அங்கு நின்ற சிலர் அநாகரிகமாக பேசியும் , அநாகரிகமாக அவர்கள் தொடர்பில் குரல் எழுப்பியும் குழப்பங்களை உண்டு பண்ணும் விதமாக செயற்பட்டமை தொடர்பிலும் பல மக்கள் பிரதிநிதிகள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
நினைவேந்தல் நிகழ்வுகள் மாத்திரமல்ல தமது போராட்டங்களுக்கு கூட ஏனைய அரசியல்வாதிகள் , மக்கள் பிரதிநிதிகள் வர கூடாது என செயற்படுவது ஒரு அரசியல் நாகரீகமற்ற தன்மை என அரசியல்வாதிகள் பலரும் சலிப்புடன் சொல்லி போராட்ட களத்தில் இருந்து வெளியேறி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....