5 56
இலங்கைசெய்திகள்

சீனாவில் வீதி அமைக்க வீட்டை கொடுக்க மறுத்த முதியவருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

Share

சீனாவை (china)சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டை அரசாங்கத்துக்குக் கொடுக்க மறுத்ததால் தற்போது நாளாந்தம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார்.

சீனாவின் ஷாங்காயின் தென்மேற்கில் உள்ள ஜின்சி நகரில் வசிப்பவர் ஹுவாங் பிங். இவரது 2மாடி வீடு இருக்கும் பகுதியில் அரசாங்கம் நெடுஞ்சாலை அமைத்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசித்த மக்கள் அனைவரும் அரசு கொடுத்த நஷ்டஈடு தொகையைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

ஆனால் முதியவர் ஹுவாங் பிங் தனது வீட்டை விற்க ஒரேயடியாக மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று அவர் கூறினார். அரசு அதிகாரிகள் பல முறை அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ரூ.2 கோடி வரை நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் பேசிப்பார்த்துள்ளனர். ஆனால் முதியவரை என்ன சொல்லியும் வழிக்கு கொண்டுவர முடியவில்லை என்பதால் அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.

ஆனால் அதன்பின்தான் முதியவருக்கு சிக்கல் ஆரம்பித்துள்ளது. அவரின் வீட்டை மட்டும் விட்டுவிட்டு இரு பக்கமும் நெடுஞ்சாலை கட்டி முடிக்கப்பட்டது. இதனால் முதியவர் தற்போது தனது பிடிவாதத்தின் விளைவை நினைத்து வருந்தி வருகிறார்.

அரசு பணம் தருவதாக சொன்னது நியாயமானதாக இப்போது தெரிகிறது. நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு வாகனங்கள் இரைச்சல், தூசியுடன், தனி வீட்டில் இருக்க முடியாது. முந்தைய காலத்துக்கு என்னால் செல்ல முடிந்தால், அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு என் வீட்டை இடிக்க ஒப்புக் கொள்வேன். ஆனால் இப்போது அது முடியாது என்று அவர் கவலையுடன் உள்ளார்.

Share
தொடர்புடையது
30
செய்திகள்இந்தியா

உலகத் தலைவர்களில் முதலிடம் பிடித்து மோடி வரலாற்றுச் சாதனை!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில்  100 மில்லியன் (10 கோடி) பின்தொடர்பாளர்களை...

29
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: ஜிம்பாப்வே பந்துவீச்சை சிதறடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் – 20 ஓவர்களில் 256 ஓட்டங்கள் குவிப்பு!

2026 ஐசிசி டி20 உலகக் கோப்பையின் சூப்பர்-8 சுற்றில் இன்று நடைபெற்று வரும் முக்கியமான போட்டியில்,...

28
அரசியல்இலங்கைசெய்திகள்

“சுரேஷ் சலேயின் கைது ஒரு கண்துடைப்பு”: அரசாங்கம் மீது சரத் வீரசேகர கடும் தாக்குதல்!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் கைது என்பது, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் கத்தோலிக்க...

27
செய்திகள்உலகம்

அமெரிக்கா – ஈரான் இடையே 3-ம் கட்ட பேச்சுவார்த்தை: அணு ஆயுதத் திட்டத்தை முடக்க டிரம்ப் அழுத்தம்!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான மூன்றாவது சுற்று மறைமுகப் பேச்சுவார்த்தைகள்...