யாழில் புகையிரதம் மோதி வயோதிபர் உயிரிழப்பு!!

22 62a003ca7ef85 1

யாழ்ப்பாணம் அரியாலையில் தொடருந்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த போல் தனஞ்சயன் (வயது -78) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார்.

வியாபார நோக்கமா துவிச்சக்கரவண்டியில் அரியாலையில் ஏவி வீதியில் சென்றபொழுது பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றது.

வயோதிபருக்கு ஏற்கனவே ஒருகண் பார்வையில்லாமலும் காது கேட்காத நிலையில் கடவையை கடக்கும் போது விபத்து ஏற்பட்டுள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.

#srilankanews

Exit mobile version