7 13
இலங்கைசெய்திகள்

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம் குறித்து தமிழ் ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை!

Share

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழர் ஆசிரியர் சங்கமானது அறிக்கை மூலம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா கோரமாகக் கொலைசெய்யப்பட்ட போது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பல்லாயிரம்பேரை ஒன்றுதிரட்டி குற்றவாளிகளுக்கு தண்டனைவழங்க பேரணி நடாத்தியதை யாவரும் அறிவர்.

அதேபோன்று இலங்கையின் தலை நகர் பகுதி கொழும்பில் தமிழ் மாணவியொருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

இதனை பலரும் மூடி மறைத்து குறித்த குற்றவாளிக்கு வெறும் இடமாற்றம் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இராமநாதன் மகளிர் கல்லூரியில் சில ஆசிரியர்கள் இடமாற்றம் வழங்கப்பட்டாலும் ஆசிரிய சங்கத்தின் அனுசரணையோடு பல ஆண்டுகள் அங்கேயே பணியாற்றுகின்றனர். இது உண்மை. இந்த கொலைச் சம்பவத்தையும் அதே நபர்கள் மூடி மறைக்க முனைந்துள்ளனர்.

குற்றவாளியாகக் காணப்படுபவரும் ஆசிரிய சங்கம் ஒன்றில் மிகவும் செல்வாக்கு மிக்கவர். அதனாலேயே ஏற்கனவே இவர் இழைத்த குற்றத்திற்கு தண்டனை வழங்கப்படவில்லை.

இது போன்று சில மாவட்டங்களிலும் சிலர் பாதுகாக்கப்படுகின்றனர். எதுவாயினும் ஒரு பிள்ளையின் மரணத்திற்கு ஒரு ஆசிரியர் காரணமாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும்.

ஆகையால் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும் அதேவேளை உடந்தையானவர்களை வெளிப்படுத்தி அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். என கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...