ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு! – எழுத்துமூல உத்தரவு கிடைக்கப்பெறவில்லை என்கிறது அரசு

Ranjan ramanayake

சிறை தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு எமக்கு இன்னும் எழுத்துமூல உத்தரவு கிடைக்கப்பெறவில்லை. ” என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நாளை ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் .

அதற்கமைய, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும் கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும் களுத்தறை சிறைச்சாலையில் 13 கைதிகளும் நாளை (04) விடுதலை செய்யப்படவுள்ளனர்.

போகம்பறை மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலைகளிலிருந்து தலா 11 கைதிகளும் வாரியபொல சிறைச்சாலையிலிருந்து 10 கைதிகளும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Exit mobile version