இலங்கையில் மற்றொரு முறை அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் போராடும் இலங்கையர்களின் குரல்களைச் செவிமடுக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இன்று காலை தனது உத்தியோகபூா்வ ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
“இலங்கையர்கள் தற்போது எதிர்கொள்ளும் உண்மையான சவால்களுக்கு முகம் கொடுத்து நாட்டை மீண்டும் செழிப்பானதாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவசரகாலச் சட்டம் இதற்கு உதவாது” என்றும் அமெரிக்கத் தூதுவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews