ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பஸ் சாரதியாகப் பணிபுரிந்துவரும் 29 வயதுடைய குறித்த சந்தேகநபரை நிட்டம்புவ பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள படுகொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்தச் சந்தேகநபர் நாடாளுமன்ற உறுப்பினர் கொலைசெய்யப்பட்டதன் பின்னர் குறித்த பகுதியில் இருந்து தலைமறைவாகியிருந்தார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews