யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகமையில் இன்று அதிகாலை இடம் பெற்ற வீதி விபத்தில் வடமராட்சி அல்வாய் பகுதியைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவர் பரிதாமாக உயிரிழந்தார்.
மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வரும் குறித்த இளைஞர் தனது பணி நிமிர்ந்தம் இன்று அதிகாலை சென்ற சமயம் குறித்த விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.
வீதியில் தரித்து நின்ற வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் அல்வாய் தெற்கைச் சேர்ந்த இந்திரசிங்கம் நிருபன் வயது 32 என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.
இவ் விபத்து சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SrilankaNews
Leave a comment