அல்வாய் முத்துமாரி அம்மன் ஆலயப் படுகொலை நினைவேந்தல்!

IMG 20220529 WA0130

யாழ்., வடமராட்சி, அல்வாய் வேலிலந்தை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வு அல்வாய் மனோகரா சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் செல்லத்தம்பி சுபேந்திரா தலைமையில் நடைபெற்றது.

1987/05/29 அன்று குறித்த ஆலயத்தில் ஒபரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்து பாதுகாப்பு என நம்பித் தங்கியிருந்தவர்கள் மீதே அரச விமானக் குண்டுத் தாக்குதல் மற்றும் எறிகணைத் தாக்குதல் மூலம் 18 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலே நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. இதில் முதல் நிகழ்வாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பின்னர் அகவணக்கம், மலர் அஞ்சலி என்பன இடம்பெற்றன.

#SriLankaNews

 

Exit mobile version