15 1
இலங்கைசெய்திகள்

ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Share

ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தை குழப்பும் முயற்சியில் ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் திரைமறைவில் செயற்பட்டு வருவதாக கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் அல்ஹாஜ் எஸ். எம். ஏ அஸீஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் நேற்று(01) மாலை நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்ககையில், கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் பெயரால் புதிய நிருவாக சபை சட்டவிரோதமாக செயற்பட முயற்சி செய்கின்றது.

இன்று வரை நாங்கள் தான் இந்த கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசல் நாஹூர் ஆண்டகை தர்ஹா ஷரீபின் தலைவர் மற்றும் நம்பிக்கையாளர் சபையினர், புதிய நிருவாக சபை பதவியேற்றலின் அடாத்தாக எம்மை அச்சுறுத்த வருகின்றார்கள்.

அவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையம் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு முறைப்பாடு செய்துள்ளேன். எமது நிர்வாகம் மீது குற்றச்சாட்டுக்கள் ஊழல் காரணமாக இரு பள்ளிவாசல்களுக்கும் என புதிதாக 22 பேர் கொண்ட நம்பிக்கையாளர் நியமனப் பத்திரத்தை 2024.07.24 அன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்கு பகுதி) வழங்கி இருப்பதனை நாம் இதுவரை ஏற்கவில்லை.

மக்களும் அவ்வாறான ஒரு கருத்தில் தான் உள்ளனர். இங்கு ஞானசார தேரர் மற்றும் இதர தரப்பினர் எமது நிர்வாகத்தை குழப்புவதற்கு முயல்கின்றனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இவ்வாறான குழப்ப நிலை ஏற்படுவது வீண் சந்தேகத்தை எம் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது என குறிப்பிட்டார்.அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பள்ளிவாசல்களில் கல்முனை முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல்களின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுக்கள் ஊழல் காரணமாக இரு பள்ளிவாசல்களுக்கும் புதிதாக 22 பேர் கொண்ட நம்பிக்கையாளர் நியமனப் பத்திரத்தை 2024.07.24 அன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (வக்கு பகுதி) வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

இதற்கமைய புதிய நம்பிக்கையாளர் சபை குழுவினர் தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளும் பொருட்டு ஊடக சந்திப்பின் ஊடாக பொதுமக்களுக்கு நேற்று அறிவித்ததுடன் குறித்த பள்ளிவாசலுக்கு சென்று அங்கு பொதுமக்களை சந்தித்து தொழுகை மேற்கொண்டு புதிய நம்பிக்கையாளர் நியமனம் தொடர்பில் தெளிவாக விளக்கங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...