அனைத்து பொறுப்புக்களும் பஸிலிடம்!
நாட்டின் அனைத்து பொறுப்புக்களும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து
குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு முன்னர் அமைச்சரவையின் முழுப் பொறுப்பையும் நிதியமைச்சரை ஏற்றுக்கொள்ளுமாறு கூறினார் என தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய நிதியமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவையால் நாட்டின் அனைத்து பொறுப்புக்களும் நிர்வகிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
                    
                            
                                
				            
				            
				            
				            
 
 
 
 
Leave a comment