சர்வகட்சி பிரதிநிதிகள் – பிரதமர் சந்திப்பு

dinesh gunawardena 1

Dinesh Gunawardena

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பான பேச்சுவார்த்தைக்காக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது, இன்று பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் சர்வக்கட்சி அரசாங்கத்திற்குள் இணைவதா அல்லது எதிரணியில் இருந்து சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா என்பது தொடர்பில் எதிர்கட்சிகள் தீர்மானிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ள சகல கட்சிகளுக்கும் இந்த சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய வேலைத்திட்டத்திற்காக நாடாளுமன்ற குழுக்களுக்கு அதிகாரமளிப்பது தொடர்பிலும் இன்று ஆராயப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version