ஜனாதிபதிக்கும், அரச பங்காளிக்கட்சிகள் மற்றும் 11 கட்சிகளின் கூட்டணிக்கும் இடையில் இன்று நடைபெறவிருந்த பேச்சு பிற்போடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்கு வருமாறு, ஆளுங்கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
இதன்படி இச்சந்திப்பு இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிக்கையில் நடைபெறவிருந்தது. இந்நிலையிலேயே அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews