சர்வக்கட்சி அரசு! – கூட்டமைப்பின் முடிவு இன்று?

sampanthan 1

சர்வக்கட்சி அரசில் தமது வகிபாகம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.

இது சம்பந்தமாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சுமந்திரன் எம்.பியும் ஏற்கனவே கலந்துரையாடியுள்ள நிலையில், சம்பந்தனை, சுமந்திரன் இன்று மீண்டும் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

அத்துடன், கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழும் கூடி, இது சம்பந்தமாக ஆராயவுள்ளது.

சர்வக்கட்சி அரசு சம்பந்தமாக எதிரணிகளுக்கிடையில் நடைபெற்ற சந்திப்புகளில் கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version