சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட அரசியல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்காக எதிரணிகள் ஓரணியில் திரண்டுள்ளன. இது தொடர்பில் பேச்சுகளும் இடம்பெற்றுள்ளன.
இதன்படி கட்சி தலைவர்களை உள்ளடக்கிய வகையில் அரசியல் குழுவொன்றையும், பொருளாதாரக்குழுவொன்றையும் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
அரசியல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ராஜிதவும், பொருளாதாரக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஹர்ஷ டி சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews