தோல்வியில் முடிந்த ரணிலின் முயற்சி!
இலங்கைசெய்திகள்

தோல்வியில் முடிந்த ரணிலின் முயற்சி!

Share

தோல்வியில் முடிந்த ரணிலின் முயற்சி!

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி கூட்டம் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அதிபர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

இன்றைய சர்வகட்சி கூட்டம் எந்தவொரு தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் நிறைவடைந்ததாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஐ.பி.சி. தமிழ் செய்திகளுக்கு தெரிவித்தார்.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மக்களின் வாக்குகளின் ஊடாக அதிபராக தெரிவு செய்யப்படாமையினால் அதிபர் தேர்தலை நடத்தி ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு சிங்கள பேரினவாத கட்சிகள் தெரிவித்துள்ளன.

எனினும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தான் அதிபரிடம் வலியுறுத்தியதாக சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதேவேளை, வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் அதிபரால் அழைப்பு விடுக்கப்பட்ட சர்வகட்சி மாநாடு அதிபரின் வழமையான அரசியல் செயற்பாட்டின் ஒரு அங்கம் என ஜக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.

சர்வகட்சி மாநாட்டில் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட நிலையில் ஜக்கிய மக்கள் சக்தி அறிக்கையிடல் மூலம் இவ்விடயத்தை தெளிவுபடுத்தியுள்ளது.

வடக்கு கிழக்குப் பிரச்சினை உடனடியாக எழவில்லை எனவும் பல தசாப்தங்களாக பல்வேறு அரசாங்கங்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...