image 6483441
அரசியல்இலங்கைசெய்திகள்

அலகா சிங் – சஜித் முக்கிய கலந்துரையாடல்!

Share

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலகா சிங், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை இன்று கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு முன்னெப்போதையும் விட வலுவான ஆதரவை வழங்குமாறு இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப்பொருள்களின் தட்டுப்பாடு தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் இந்நிலைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியால் செயற்படுத்தப்பட்டுவரும் ‘எதிர்க்கட்சியின் மூச்சு’ வேலைத்திட்டம் மூலம் 50 க்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரால் இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்தச் செயற்பாட்டாய் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...