அஜித் இல்லை.. தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

24 66336a8367cc4

அஜித் இல்லை.. தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?

நடிகர் அஜித்தின் 53ம் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று தீனா படம் ரீரிலீஸ் ஆனது. வெளியாகி 23 வருடம் ஆகும் இந்த படத்தை மீண்டும் தியேட்டரில் பார்த்து ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படம் அஜித் கெரியர் மட்டுமின்றி முருகதாஸ் கெரியரிலும் முக்கிய படமாக அமைந்தது. லைலா ஹீரோயினாக நடித்து இருந்தார்.

தீனா படத்தில் முதலில் நடிக்க இருந்தது பிரஷாந்த் தான் என அவர் அப்பா தியாகராஜன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

அந்த நேரத்தில் பிரஷாந்த் பல படங்களில் நடித்து கொண்டிருந்ததால் காத்திருக்கும்படி முருகதாஸிடம் கூறினாராம். ஆனால் அவரோ அஜித்தை வைத்து படத்தை எடுத்து முடித்துவிட்டார் என தியாகராஜன் பேட்டியளித்த இருக்கிறார்.

Exit mobile version