விசேட அதிகாரங்களுடன் ஆளுநராக பதவியேற்கிறார் அஜித் நிவாட்!
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை 13 ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் இராஜாங்க அமைச்சர் ஆகிய பதவிகளை இராஜினாமா செய்வதற்கான தனது இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் 16ஆம் திகதி சில விசேட அதிகாரங்களுடன் மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆளுநராக பதவியேற்கவுள்ள அஜித் நிவாட் கப்ராலால் முன்வைக்கப்பட்ட சில நிபந்தனைகளை நிறைவேற்றும் விதத்தில், அவருக்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சில விசேட அதிகாரங்களுடன் மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்கவுள்ளார் .
இதேவேளை, மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment