மாடுகள் திருட்டு! – யாழ் மக்களுக்கு எச்சரிக்கை

image 527bbd63e6

யாழ். மாவட்டத்தில் அண்மைக் காலமாக மாடுகள் திருடப்படும் சம்பவம் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.

மாடுகள் தொடர்பில் உரிமையாளர்கள் அவதானமாக இருக்குமாறு பலதடவைகள் வலியுறுத்தியும் பொதுமக்கள் அசட்டயீனமாக நடந்து கொள்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதிகளிலும் , வீட்டுக்கு முன்னால் உள்ள மின்கம்பங்களிளும், கால்நடைகளை கட்டி வளர்ப்பதுடன் வீட்டின் வெளிக்கவினையும் ஒழுங்கான முறையில் பூட்டாததன் காரணமாக இவ்வாறு கால்நடைகள் திருடப்படும் சம்பவங்கள் இடம்பெறுகின்றது.

கால்நடை வளர்ப்பாளர்களின் அவதான குறைபாடே இவ்வாறு கால்நடைகள் திருடப்படுவதற்கு காரணமாக அமைவதுடன் பல லட்சம் ரூபாய் பெறுமதியான கால்நடைகள் இவ்வாறு இறைச்சி வியாபாரிகளினால் திருடப்படும் செல்கின்றது.

தமது வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளை ஒழுங்கான முறையில் பராமரித்து வளர்ப்பதன் மூலம் இவ்வாறு திருட்டுக்களை கட்டுப்படுத்த முடியும் என பொலிஸார்  தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக கோப்பாய், அச்சுவேலி கரவெட்டி, நீர்வேலி, கோப்பாய்  பகுதிகளில் கால்நடைகள் திருட்டு சம்பவம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இந்த திருட்டு சம்பவத்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அந்த நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட மூத்த பொலிஸார் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version