காற்று மாசு – முகக்கவசம் அணிய வலியுறுத்து!

1670493441 anil 2

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு டொக்டர் அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இயலுமானவரை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் டொக்டர் அனில் ஜாசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். காற்று மாசு நிலை குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இந்த நேரத்தில், காற்றின் மாசு நிலை தற்காலிகமாக மோசமடைந்துள்ளது. இந்தியாவில் இருந்து வரும் காற்றால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, ​​கொழும்பு, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம், கண்டி, வவுனியா போன்ற முக்கிய நகரங்களில் இந்த மோசமான காற்று மாசு நிலை பதிவாகியுள்ளது.”

“இந்த நிலைமையை இலங்கையில் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் வீட்டை விட்டு வெளியே வருவதை முடிந்தவரை கட்டுப்படுத்தினால் நல்லது. மேலும் இதுபோன்ற சூழ்நிலையில் முகக்கவசத்தை அணிவது முக்கியம்.” எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version