தேர்தலுக்கு நிதி – மீண்டும் கடிதம்

Provincial Council election 1

தேர்தல் ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கைகளுக்காக பணம் வழங்குமாறு கோரி திறைசேரிக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி லியனகே தெரிவித்தார்.

திறைசேரியின் நடவடிக்கை  பிரிவுக்கு குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதத்தின் பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அச்சக நடவடிக்கைகளுக்கான பணத்தை பெற்றுத்தருமாறு கோரி இதற்கு முன்னர் நிதி அமைச்சுக்கு கடிதம் அனுப்பிய போதிலும், அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்றார்.

தேர்தல் ஆவணங்களை அச்சிடுவதற்கு தமது திணைக்களம் 500 மில்லியன் ரூபாயைக் கோரியுள்ள போதும் இதுவரை 40 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாகவும் அந்த நிதி அது போதுமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 12ஆம் திகதி தெரிவித்தது.

நிதி அமைச்சர் என்ற வகையில் இது தொடர்பான கடிதம் ஜனாதிபதிக்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

#SriLankaNews

Exit mobile version