tamilni 359 scaled
இலங்கைசெய்திகள்

க.பொ.த உயர்தரத்திற்கான அனுமதி அட்டைகள் குறித்து அறிவிப்பு

Share

க.பொ.த உயர்தரத்திற்கான அனுமதி அட்டைகள் குறித்து அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகளை மீள்பார்வை செய்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அனுமதி அட்டைகளை மீள்பார்வை செய்யும் காலம் எதிர்வரும் டிசம்பர் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நீங்கள் விண்ணப்பித்தது போல் பெயர் சரியாக இருக்கிறதா? பாடங்கள் சரியா? மொழி மூலம் சரியா? பிறந்த திகதி சரியா? இதில் பிழை இருந்தால் அவகாசம் கொடுத்துள்ளோம். டிசம்பர் 22 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை அதற்கான நேரம் உண்டு.

https://onlineexams.gov.lk/onlineapps/ என்ற இணையதளம் ஊடாக உங்கள் அனைத்து திருத்தங்களையும் செய்யலாம். அதன் பிரதியை பெறுவதற்கு நாங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றார்.

மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் பரீட்சை அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...