குறைந்த வருமானம் பெறுவோருக்காக அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

குறைந்த வருமானம் பெறுவோருக்காக அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

Share

குறைந்த வருமானம் பெறுவோருக்காக அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

குறைந்த வருமானம் பெறும் மக்களை முன்னேற்றுவதற்கு எடுக்கப்பட வேண்டிய கொள்கை நடவடிக்கைகள் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்த கொள்கைத் தீர்மானங்கள் முறையாக எடுக்கப்படாமையால், கடந்த காலங்களில் பொருளாதார சிக்கல்கள் பலவற்றை சந்திக்க வேண்டியிருந்தது.

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் தீவிர பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நலன்புரித் திட்டத்தின் முன்னேற்றங்கள் குறித்து இதன்போது மதிப்பாய்வு செய்யப்பட்டது. சிறுநீரக நோயாளர்கள், முதியோர் கொடுப்பனவிற்கான பதியப்பட்ட அனைவருக்கும் அந்த நன்மைகளை வழங்குமாறு அவர் ஆலோசனை வழங்கினார்.

அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாட்டில் உள்ள அரச அதிகாரிகளின் தீவிர பங்களிப்பு அவசியமாகும். அதன்போது நன்மைகளை அடையாளம் காண்பது முறையாக இடம்பெறும்.

அஸ்வெசும நலத்திட்டத்தை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும்ரூபவ் ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
inject 251215
செய்திகள்இலங்கை

‘ஒன்டன்செட்ரோன்’ தடுப்பூசியால் நோயாளிகளுக்குப் பாதிப்பு: சுகாதார அமைச்சுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கடும் கண்டனம்!

சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரோன்’ (Ondansetron) தடுப்பூசி செலுத்தப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் சில நோயாளிகளுக்கும் உடல்நலச் சிக்கல்கள்...

1703761313 rukshan bellana l
இலங்கைஅரசியல்செய்திகள்

சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன பணி இடைநீக்கம்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன, சுகாதார அமைச்சினால்...

sampath manamperi 549004
இலங்கைஅரசியல்செய்திகள்

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பு விவகாரம்: சம்பத் மனம்பேரிக்கு டிசம்பர் 24 வரை மேலதிக தடுப்புக்காவல்!

ஐஸ் (ICE) போதைப்பொருள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களைக் கைவசம் வைத்திருந்த...

images 2 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை – கொழும்பு கோட்டை இடையிலான பகல்நேர நேரடி புகையிரத சேவை நாளை முதல் ஆரம்பம்!

திருகோணமலை மற்றும் கொழும்பு கோட்டைக்கு இடையிலான நேரடி பகல்நேர புகையிரத சேவை நாளை சனிக்கிழமை (டிசம்பர்...