வெள்ளத்தின் மத்தியில் யாழ். மாநகர ஊழியர்களின் செயல்

யாழ்ப்பாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக யாழ்.மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் சூழ்ந்திருந்த வெள்ளத்தினை யாழ். மாநகர ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் வெளியேற்றினர்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் திடீரென கடும் மழை பொழிந்தது. அதனால் யாழ்.மத்திய பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள கடைத்தொகுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் தேங்கி நின்றன.

அந்நிலையில் மாலை யாழ்.மாநகர சபை ஊழியர்கள் வெள்ளத்தை கடும் சிரமத்தின் மத்தியில் வெளியேற்றினர்.

வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால் பகுதிக்குள் பெருமளவான கழிவு பொருட்களை பொறுப்பற்ற தனமாக பலர் வீசி சென்றமையால் வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால் பகுதிகள் கழிவு பொருட்களால் நிரம்பி காணப்பட்டமையால் வெள்ளம் வழிந்தோட முடியாத நிலைமை காணப்பட்டது.

கழிவு பொருட்களை மாநகர சபை ஊழியர்கள் அகற்றி வெள்ள வாய்க்காலை சிரமங்களுடன் துப்பரவு செய்தமையால் வெள்ளம் சில நிமிடங்களில் வழிந்தோடியுள்ளது .

குறித்த பணியில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபனும் மாநகர ஊழியர்களுடன் இணைந்திருந்தார்.

01 7

#SriLankaNews

Exit mobile version