அமைச்சரவை கூட்டுப்பொறுப்பைமீறிச் செயற்படும் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது.
மொட்டு கட்சியின் செயலாளர் சாகர காரியவசத்தால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேற்படி மூவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
#SriLankaNews