பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்! – இராணுவத் தளபதி

நாட்டில் தற்போது அமுலில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் தளர்த்தப்பட்டாலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

” கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் இன்று கூடவுள்ளது. இதன்போது நாட்டில் தற்போது அமுலில் உள்ள பல கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி, பொறுப்புடன் நடந்துகொண்டு, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.” – என்றும் அவர் கூறினார்.

Exit mobile version