tamilni 559 scaled
இலங்கைசெய்திகள்

கோர விபத்தில் மனைவி பலி – ஆபத்தான நிலையில் தந்தை மற்றும் பிள்ளை

Share

கோர விபத்தில் மனைவி பலி – ஆபத்தான நிலையில் தந்தை மற்றும் பிள்ளை

கண்டி ரிகில்லகஸ்கட – திம்புல்கும்புர வீதியில் கடரஹேன பிரதேசத்தில் நேற்று பிற்பகல் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உடகலையில் இருந்து ரிக்கில்லகஸ்கட நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சாரதியும் 6 வயது பிள்ளையும் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...