வவுனியாவில் கோர விபத்து! – தந்தை, மகன் பரிதாபச் சாவு!

IMG 20220306 WA0017

வவுனியா, பூவரசங்குளம், குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் பஸ் – மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா – மன்னார் வீதி, குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ள ஒழுங்கை ஒன்றில் இருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிள் ஒன்று ஏற முற்பட்டுள்ளது.

இதன்போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள், பஸ்ஸின் கீழ்ப்பகுதியில் சிக்குண்டது. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிழந்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து பஸ்ஸின் மீது தாக்குதல் மேற்கொண்டு பஸ்ஸின் கண்ணாடிகளைச்  சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் அப்பகுதில் பதற்ற நிலைமை நிலவியது. பூவரசங்குளம் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்த விபத்தில் 35 வயதுடைய தந்தை மற்றும் 17 வயதுடைய மகன் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.

#SriLankaNews

Exit mobile version